தவெக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

57பார்த்தது
பரமக்குடியில் தவெக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்கள் மலர்விழி ஜெயபாலா, மதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியினர், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு துவா செய்து சிறப்பித்தனர்‌.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர்ஜுன் பாண்டியன் சிறப்பாக செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி