பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் அரசநகரி கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது.
இக்கோயிலில் 31ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 6: 00 மணிக்கு கரகம் எடுத்தல், உற்ஸவர் அம்மன் வீதி உலா மற்றும் பெண்கள் பூக்கூடைகளை சுமந்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து அம்மன் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று பொங்கல் விழா, பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு மகமாயி நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் கண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.