மதுராவிலிருந்து மிதிவண்டியில் யாத்திரைடயாக 7, 000 கிலோ மீட்டர் பக்தர் 12 ஜோதிலிங்கத்தை காண பயணம்
இந்தியா முழுவதிலும் உள்ள 12 ஜோதிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக மிதிவண்டியில் 7, 000 கிலோமீட்டர் சாலை மார்க்கமாக 12 ஜோதிலிங்கத்தை சாமி தரிசனம் செய்து வருகிறார் மதுரா பிருந்தாவனத்தைச் சேர்ந்த சந்திரதாஷே இவர் இறுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சென்று விட்டு வணங்கானேந்தல் கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறுகையில் நான் சோம்நாத், நாகேஸ்வர், உஜைன் உள்ளிட்ட 11ஜோதிலிங்கத்தை தரிசனம் செய்து விட்டு தற்போது ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமி தரிசனம் செய்துவிட்டு மதுரா பிருந்தாவனத்தில் உள்ள தனது ராதா கிருஷ்ண மந்திர் ஆசிரமத்திற்கு செல்வதாக தெரிவித்தார் மேலும் தனது யாத்திரையின் நோக்கமே உலக நன்மைகாகவும் தனக்கு மோட்சம் வேண்டியும் யாத்திரையாக சென்று சிவபெருமானை தரிசனம் செய்து வருகிறேன் என தெரிவித்தார்