ராமநாதபுரம், அக். 9- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா கொம்பூதி கிராமத்தில் ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கிராம மக்களுடன் தரையில் அமர்ந்து நிறை, குறைகளை கேட்டறிந்தார். இதில் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேவைப்படும் இடங்களில் பொது குழாய்கள் கூடுதலாக நிறுவி குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார், துணை வட்டாட்சியர் பரமசிவம், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.