தண்ணீர் தொட்டிக்கு மாலை போட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்.!

554பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியான முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலாடி தாலுகா சிக்கல் ஊராட்சி பகுதி கிராமங்களில் மூன்று ஆண்டுகளாக குடிநீரின்றி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அப்பகுதி குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், அரசு நிர்வாகத்தை கண்டித்து, வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கியநாதன் தலைமையிலான பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அமக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிக்கு இறந்த உடலுக்கு செய்யும் மரியாதை போல, மாலை சூடி, மரியாதை செய்து காலி குடங்களுடன் சுற்றி அமர்ந்திருந்த பொதுமக்கள் தலையில் துண்டை போட்டு ஒப்பாரி வைத்து, இயல்பாக ஒரு இழவு வீட்டில் நடப்பது போன்று சாவு கேட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி