காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு, திருவிளக்கு பூஜை!

541பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நீராவிகரிசல்குளம் காளியம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த 14-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மாலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் முதல் கால பூஜை, வாஸ்து சாந்தி, பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை காலை நான்காம் கால பூஜை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா், குடமுழுக்கு நடைபெற்றது. பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து காளியம்மனுக்கு 16 வகையான மூலிகைத் திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மாலையில் கோயில் வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திரு விளக்கு பூஜை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி