காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைக்கிறார்கள் - ராகுல் தாக்கு

74பார்த்தது
காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைக்கிறார்கள் - ராகுல் தாக்கு
பொருளாதார ரீதியாக காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைக்கிறார்கள் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அந்த குடும்பம் பஞ்சத்தால் பாதிக்கப்படும், அந்த நிலை தான் காங்கிரசுக்கு. வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவும், விளம்பரம் செய்யவும் கூட எங்களிடம் பணம் இல்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி