தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு

584பார்த்தது
தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறேன். தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும். மார்ச் 24ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் பரப்புரையை தேமுதிக தொடங்குகிறது. மார்ச் 25ஆம் தேதி தேமுதிக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்கள் என்று கூறினார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), கடலூர், தஞ்சாவூர், மத்திய சென்னை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி