வெயிலின் தாக்கத்தால் கருகும் தக்காளி - விவசாயிகள் கண்ணீர்!

70பார்த்தது
வெயிலின் தாக்கத்தால் கருகும் தக்காளி - விவசாயிகள் கண்ணீர்!
தர்மபுரி மாவட்டம் முழுவதும் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் மற்றும் கிணறுகளில் உள்ள நீரின் அளவு கணிசமான அளவு குறைய தொடங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் கிணற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான நீர் இல்லாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் தக்காளி செடிகளிலேயே தக்காளிகள் கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு வெயிலின் தாக்கத்தால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள தக்காளி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி