டீப்ஃபேக்கால் பாதிக்கப்பட்ட இத்தாலி பிரதமர்

61பார்த்தது
டீப்ஃபேக்கால் பாதிக்கப்பட்ட இத்தாலி பிரதமர்
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி டீப்ஃபேக்கால் பாதிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆசாமிகள் மெலோனியின் முகத்தை ஒரு ஆபாச நட்சத்திரத்தின் முகமாக மாற்றி வீடியோக்களை பல்வேறு தளங்களில் பதிவேற்றினர். இதை எதிர்த்து மெலோனி நீதிமன்றத்தை அணுகினார். இருவர் மீதும் ஒரு லட்சம் யூரோக்கள் (ரூ. 90 லட்சம் வரை) அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் ஜூலை 2ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி டீப்ஃபேக் மூலம் திரைப்பிரபலங்கள் பலரின் வீடியோக்கள் கசிய விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி