அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு.!

72பார்த்தது
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு.!
சாயல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள்கிழமை பூங்கொத்து கொடுத்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று (திங்கள்கிழமை) பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட 50 முதல் வகுப்பு மாணவர்களை பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சரிகாபானு, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியை கீதாரமணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும். இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கதை, பாடல், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது ஆசிரியைகள் மனோகரி, செல்வி, அர்ச்சணா மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :