ரூ.1.10 கோடி செலவில் இலவச இதய சிகிச்சை முகாம் - 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

74பார்த்தது
ரூ.1.10 கோடி செலவில் இலவச இதய சிகிச்சை முகாம் - 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ராமநாதபுரம் கேணிக்கரை வேலு மாணிக்கம் டைனி டாட்ஸ் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு சார்பில் திருநெல்வேலி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து இலவச இதயம் காப்போம் மருத்துவ முகாம் நடத்தியது.

சங்க தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு தினேஷ் பாபு, துணை ஆளுநர் டாக்டர் ரம்யா தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை ரோட்டரி முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில், ஈஜிசி , எக்கோ பரிசோதனை, பிஎம்ஐ ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில், சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 175 நபர்கள் இலவச பரிசோதனையில் பங்கேற்றனர்.

இலவச இதய சிகிச்சை முகாம் குறித்து ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு தினேஷ் பாபு கூறுகையில், ரோட்டரி குளோபல் கிரான்ட் திட்டத்தின் கீழ் விருதுநகர் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் சார்பில் முன்னாள் ஆளுநர் முத்து அவர்களின் ரூ45 லட்சம் பங்களிப்புடன் ஒரு கோடியே 10 லட்சம் செலவில் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மூலம் பரிசோதனை வாகனம் பெறப்பட்டு இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி