மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

62பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஒரே இலக்கு! தமிழ்நாடு வெல்லும்! தமிழ்நாடு போராடும்! என்ற லட்சியத்தினை வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைக் கழக பேச்சாளர் கவிஞர். ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும் பொழுது ஹிந்தி படிப்பதை நாங்கள் தடுக்கவில்லை ஹிந்தி திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். எப்பொழுதும் தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கையை மட்டும்தான் ஏற்றுக் கொள்வோம். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பேசினார். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ஐம்பது லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. தற்போது மோடி தலைமையிலான ஆட்சியில் நூற்றி என்பதொரு லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றதாக குறிப்பிட்டு மக்களை கடன்கார்களாக மோடி ஆக்கியுள்ளார் என்றார்.

ஆளுநர் தேவை இல்லாத வேலையை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சனாதனம் பற்றி பேசுவதாகவும் ஆளுநர் நமக்கு தேவையில்லை என கூறினார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு காலத்திலும் ஜெயிக்க முடியாது என கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி