ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் திருச்சியில் கொலை

54416பார்த்தது
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் திருச்சியில் கொலை
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பிரபாகரன் திருச்சியில் 4 பேர் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். வள்ளுவன் நகரை சேர்ந்த பிரபாகரனை நேற்றிரவு 4 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் இவரிடம் கடந்த சனிக்கிழமை விசாரணை நடத்தியிருந்த நிலையில், நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக இருந்தார். இதனிடையே அவரது அலுவலகத்திற்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் பிரபாகரனின் தலையை சரமாரியாக வெட்டி சிதைத்து கொலை செய்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி