வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி

51பார்த்தது
வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி
த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் பலகட்டங்களாக படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றுடன் ரஜினிகாந்த் தனது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி