ஆந்திராவில் கலவரம் - ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது தாக்குதல்

53பார்த்தது
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நரசராவ்பேட்டையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. இந்த மோதலில் குண்டூர் ஆளுங்கட்சி எம்எல்ஏ கோபிரெட்டி ஸ்ரீனிவாஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை போலீசார் அங்கிருந்து விரட்டியடித்தனர். தொடர்ந்து, ரப்பர் குண்டை பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி