பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சோனாக்ஷி சின்ஹா. ரஜினிகாந்த் நடிப்பில் 2014ல் வெளியான லிங்கா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். 37 வயதான சோனாக்ஷி சின்ஹாவிற்கு திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சாஹீர் இக்பால் என்பவரை நீண்ட நாட்களாக அவர் காதலித்து வந்தார். இந்த சூழலில் வரும் ஜூன் 23ஆம் சோனாக்ஷி சின்ஹா - சாஹீர் இக்பால் ஜோடிக்கு திருமணம் நடைபெறவுள்ளது.