‘டெல்டா, கொங்கு மாவட்டங்களில் 10 நாட்களுக்கு மழை’

83பார்த்தது
‘டெல்டா, கொங்கு மாவட்டங்களில் 10 நாட்களுக்கு மழை’
தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் இன்று (அக்.20) முதல் நாளை (அக்.21) காலை வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், “அடுத்த 10 நாட்களுக்கு டெல்டா, கொங்கு மற்றும் உள்மாவட்டங்களில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மதுரை, சிவகங்கை, கொடைக்கானலில் மழைக்கு வாய்ப்பு உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி