விரைவில் தமிழகம் வரும் ராகுல் காந்தி

56பார்த்தது
விரைவில் தமிழகம் வரும் ராகுல் காந்தி
தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் ராகுல் காந்தி, திருநெல்வேலி, விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்கள், தென்காசி, தூத்துக்குடி திமுக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து, கோவையில் திமுக வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய உள்ளார். இன்று (ஏப். 3) கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி