உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கு சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. அங்குக் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 17 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நேரு குடும்பத்தினர் வழக்கமாகப் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களைக் காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்ற தகவல் பரவி வருகிறது. முன்னதாக மத்திய அமைச்சரும், தற்போதையும் எம்பியுமான ஸ்மிருதி இராணி தைரியம் இருந்தால் அமேதி தொகுதியில் போட்டியிடுங்கள் என ராகுல் காந்திக்கு சவால் விடுத்திருந்தார்.