குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா சொந்த நாடு திரும்பியுள்ளார். முக்கியமான தனிப்பட்ட காரணமாக ரபாடா சொந்த நாடு திரும்பியதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது இந்தியா திரும்பி மீண்டும் அணியில் இணைவார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ஐபிஎல்-ல் தொடர்ந்து 200+ ரன்கள் குவிக்கப்படுவது குறித்து ரபாடா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.