மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு நடிகர் விஷால் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சங்கக் கட்டிடம் விரைவில் கட்டிமுடிக்கப்படும் என கூறினார். பின்னர் அவரிடம் கட்டிடம் கட்டிமுடித்த பிறகு உங்களது திருமணத்தை எதிர்பார்க்கலாமா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, நிச்சயமாக நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன், 9 வருஷம் ஆச்சுல்ல, என் திருமணத்தில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.