புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை

79பார்த்தது
புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை
சிநேகம் அறக்கட்டளை தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடந்த விசாரணையில் அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் மார்ச் 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி