இலுப்பூர்: பைக்குகள் மோதல் வாலிபர் பலி!

50பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(22). பட்டதாரி. நேற்று இரவு 7. 00 மணியளவில் இலுப்பூரில் இருந்து மேட்டுச்சாலை நோக்கி, பைக்கில் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை விராலிமலை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, எதிரே வந்த அதே கிராமத்தைச் சேர்ந்தபாக்யராஜின் பைக் மோதியது. இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த பாக்யராஜ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலாஜியின் உடல் பிரதேச பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி