அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி!

1086பார்த்தது
அன்னவாசல் அருகே உள்ள அண்ணாபண்ணையை சேர்ந்தவர் லீலாமேரி (50) இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் லீலா மேரி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி