கிராம மக்கள் போராட்டம்!

2251பார்த்தது
கிராம மக்கள் போராட்டம்!
திருமயம்: புதுகை நகராட்சியுடன் 11. ஊராட்சிகளை இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து ஊராட்சிகளை இணைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், மாநகராட்சியால் வரியினங்கள் உயரும், 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் என்பதால் சில ஊராட்சி மக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தேக்காட்டூர் ஊராட்சியை சேர்ந்த 150 பேர் சலீம் தலைமையில் நமணசமுத்திரம். கடைவீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வந்து பேச்சு வார்த்தை நடத்தி, இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி