கீரணிப்பட்டியில் தேரோட்டம்!

68பார்த்தது
கீரணிப்பட்டியில் தேரோட்டம்!
திருமயம் அருகே உள்ள கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி காப்புக்கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது.
முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப் பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதும், இளையாத்தங்குடி ஜமீன்தார் ராஜா, கிராம அம்பலகாரர்கள், நகரத்தார் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைக்க, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர். தேர் கோயிலை சுற்றி 4 வீதிகளிலும் வலம் வந்து மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது. பாஜ நிர்வாகிகள் முருகேசன், சுந்தர்கணேஷ், திருமயம் ஒன்றியக்குழுத் தலைவர் அழ. ராமு, மாவட்ட கவுன்சிலர் பாண் டியன், அதிமுக இளைஞரணி முத்து, ராங்கியம் ஊராட்சி தலைவர் சாந்தி, துணைத்தலைவர் கலைச்செல்வி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இளையாத்தங்குடி நித்திய கல்யாணி அம்மன் தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் செய் திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி