புதுகை டிவிஎஸ் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் 77 பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் இறுதி போட்டியில் முதல் பரிசை ஒட்டன்சத்திரம் அணியும், 2ஆம் இடத்தை சென்னை அணியும், 3ஆம் இடத்தை திருநெல்வேலி அணியும், 4ஆம் பரிசை அத்தியூர் அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார்.