புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தும், குற்றவாளிகளை கைது செய்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பங்களா குளம் வீதி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கறம்பக்குடி அம்புகோவில் ரோடு குறவர் காலணியை சேர்ந்த 26 வயது இளைஞர் அருண்பிரசாத்தையும் கறம்பக்குடி பங்களா குளம் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கறம்பக்குடி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 160 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 26 வயது இளைஞர் அருண் பிரசாத்தை புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும் 15 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.