வேளாண்மை உணவு பதப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி மாநாடு கண்காட்சியில் கலந்துகொண்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உதவியாளரை நோக்கி "எருமை மாடு" எனக் கூறி ஒருமையில் பேசி "பேப்பர் எங்கே?" என திட்டினார். மாநாட்டில் உரையாற்றுவதற்கான காகிதத்தை உதவியாளர் பரசுராமன் கொண்டு வந்து தராததால் டென்ஷனான அமைச்சர் இவ்வாறு திட்டியுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.