முள் படுக்கையில் அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்

76பார்த்தது
சிவகங்கை: திருப்புவனம் லாடனேந்தலில் உள்ள பூங்காவனம் முத்து மாரியம்மன் கோயில் மண்டல பூஜையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோயில் நிர்வாகியும் பெண் சாமியாருமான நாகராணி காப்பு கட்டி விரதம் இருந்தார். கோயில் எதிரில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஏழடி உயர கருவேலம், இலந்தை, கற்றாழை உள்ளிட்ட பலவகை தாவரங்களின் முள் படுக்கையில் சாமியார் நாகராணி படுத்து தவம் இருந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி