ஊட்டியின் வேல்யூ பகுதியில் மிகப்பெரிய பாறைகள் மற்றும் குகைகளுக்கு நடுவில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு ஆஞ்சநேயருக்கு தனி சிலை இல்லை. அங்குள்ள பாறையிலேயே சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கீழ்ப் பகுதியில் பாதாள குகை ஒன்றும் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் இங்கிருந்து பக்காசூரன் மலை வரையிலும் பாதை இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.