ஆந்திரா சித்தூரைச் சேர்ந்தவர் புஜ்ஜிரெட்டி (51). இவர், சபரிமலையில் தரிசனம் முடித்துவிட்டு, சக பக்தர்களுடன் சாமி தரிசனம் செய்வதற்காக பழனி முருகன் கோயிலுக்கு வந்திருந்தார். ஆயக்குடி பகுதியில் சாலையோரத்தில் உணவு சமைத்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென புஜ்ஜிரெட்டிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சக பக்தர்கள் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புஜ்ஜிரெட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால் உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.