செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டி அருகே அதிவேகமாக வந்த தனியார கல்லூரி பேருந்து இடதுபுறத்தில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வலது புறமாக சென்ற இன்னொரு பேருந்தை தனியார் கல்லூரி பேருந்து முந்த முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதில் நிலைதடுமாறி விழுந்த இருசக்கர வாகன ஓட்டி சங்கரின் தலைமீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் ஹெல்மெட் அணிந்திருந்தும் அவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.