புத்தகத் திருவிழா பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி!

72பார்த்தது
புத்தகத் திருவிழா பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி!
கந்தர்வகோட்டையில்: புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து வெள்ளிக்கிழமை நடத்திய விழிப்புணர்வு பேரணியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் அ. ரகமதுல்லா தலைமை வகித்தார்.
கந்தர்வகோட்டை காந்திசிலையருகே தொடங்கிய பேரணி, தஞ்சை, புதுகை சாலை, பேருந்து நிலையம், திருச்சி சாலை வழியாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை வந்தடைந்தது.
பேரணி ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலட்சுமி, ஆசிரியர் கே. பாக்யராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆசிரியர்கள் மாலா, சாந்தி, மைவிழி உள்ளிட்டோ கலந்து கொண்டனர். நிறைவாக சிறப்பாசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி