புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆடுமங்கலம் கண்மாய் பகுதியில் சுமார் 70 வயது உடைய ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு சென்ற அமரடக்கி விஏஓ செல்வி அமலா, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த காவல் துறையினர் இறந்து கிடந்தவர் உடலை மீட்டு, உடல் கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்று தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.