மணமேல்குடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு வருகிறது. இப்போது கோடைக்காலம் காரணமாக வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக இருப்பதால் மின்தடையின்போது, வியர்வை மற்றும் கொசுக்கடி காரணமாக முதியவர்கள், குழந்தைகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக நோயாளிகள் கடும் சிரமங்களை சந்திக் கின்றனர். இரவு நேரத்தில் மின்தடை ஏற்படாமல் தடுக்க மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.