பக்தர்கள் நெல், சேவல் நேர்த்திக்கடனாக செலுத்தி சுவாமி தரிசனம்

66பார்த்தது
இந்த ஆண்டின் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அறந்தாங்கி புகழ் விளானுர் பாம்ப னி அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் நெல், சேவல் போன்றவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தி சுவாமி தரிசனம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா விளானூர்கிராமத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீ பாம்பாணி அம்மன். இந்த வருடத்தின் முதல் ஆடி வெள்ளிக்கிழமையான இன்று பாம்பனி அம்மனின் திருக்கோவிலுக்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்த கோடிகள் மற்றும் ஆன்மீக மெய்யன்பர்கள் வருகை தந்தனர்.
மேலும் இந்த அம்மனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் பாம்பு மற்றும் விஷபூச்சிகள் போன்ற விஷஜந்துக்கள் தங்கள் வீட்டுப் பகுதியிலும் வரவே வராது என்ற நம்பிக்கை பக்த கோடி பொதுமக்களிடம் திரளாக உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பக்தகோடி பெருமக்கள் நேர்த்திக்கடனாக வேண்டிக்கொண்ட சேவல் மற்றும் நெல் போன்றவற்றை கோவிலின் புனித நீர் தெளித்து கோவிலை சுற்றி வந்து செலுத்தினர். திருக்கோவிலுக்கு அருகாமையில் மரத்தில் மஞ்சள் கயிறு கட்டினால் உடனடியாக திருமணம் நடைபெறும் என்பதும் ஐதீகம் அதேபோல் அந்த திருக்கோவிலுக்கு அருகாமையில் நெய் விளக்கு இட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

தொடர்புடைய செய்தி