அறந்தாங்கி மறமடக்கியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்!

51பார்த்தது
அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வகையிலும் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தவும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் வழங்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி வரை 66 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் நடந்த முகாமில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூடுதல் கலெக்டர் பக்தாத் ரசூல் ஒன்றிய குழு தலைவர்கள் மகேஸ்வரி வள்ளியம்மை தாசில்தார் திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி