புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஆலங்குடி பகுதியில் உள்ள அனைத்து வார்டு மக்களுக்கும் நிலவேம்பு கசாயம் தூய்மை பணியாளர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் தினசரி காலையில் அனைத்து பகுதிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என்று பேரூராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.