ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காட்டில் மகளிர் உரிமை தொகைகோரி விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 200க்கும் மேற்பட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், குளமங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், திறனாய்வு தேர்வுக்காக ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு அரசு பஸ்சில் பயணம் செய்தனர். அப்போது, மாணவ மாணவிகள் தேர்வுக்கு செல்ல முடியாமல், அலறி துடித்தனர்.
இதனைத் தொடர்ந்து பஸ் மறியல் ஈடுபட்ட பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவில் தேர்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.