புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்மாள் சமேத அரங்குளநாதர் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் கோவிலுக்குள் வெள்ளம் போல் புகுந்தது. இதனால் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடிக் கொண்டிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மழைநீர் மூலவர் சந்நிதி வரை சென்றுள்ளது. இதனால் கோயில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.