கேபிள் திருடன் சிக்கினார் ஆலங்குடி மக்கள் நிம்மதி!!

60பார்த்தது
ஆலங்குடி பேரூராட்சி
பகுதிகளில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்டர்நெட் மையங்கள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன இந்த நிறுவனங்கள் தனியார் ஏஜென்சி வாயிலாக பிஎஸ்என்எல் பைபர் கேபிள் மூலம் இண்டர்நெட் வசதி பெற்று வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த பைபர் கேபிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனால் இண்டர்நெட் சேவை கிடைக்காமல் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தனியார் ஏஜென்சி நிர்வாகத்தினர் சமூக வலைதளத்தில்• திரைப்பட நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் நுாதன போஸ்டர் ஒன்றை வடிவ மைத்து வெளியிட்டனர். இதன்பின்னரும் திருட்டு தொடர்ந்தது. கடந்த 1ம் தேதி கல்லாலங்குடியில் ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள பிஎஸ்என்எல் கேபிள் மற்றும் பாக்ஸை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுதொடர்பாக அந்த பகுதியில் அமைக் கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, கல்லாலங்குடி நடேசன் நகரை சேர்ந்த ஆரோக்கிய சுந்தர ஜெயசீலன்(34) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுபற்றி புதுக்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலக இளநிலை அலுவலர் சங்கரசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து ஆரோக்கிய சுந்தர ஜெயசீலனை கைது செய்தனர். இதனால் ஆலங்குடி நகரமக்கள், வியா பாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி