புதுச்சேரி - Puducherry

புதுச்சேரி: 10 கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களை ஆம்புலன்ஸில் ஏற்றிய அவலம்

புதுச்சேரி எல்லப்பிள்ளைசாவடி பகுதியில் அரசின் ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தை நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.  இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் இசிஜி, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பல மாதங்களாக பழுதடைந்துள்ளன. இதனால் இங்கு தினமும் சிகிச்சைக்கு வரும் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் மற்றும் நிறைமாத கர்ப்பிணிகள் 10-க்கும் மேற்பட்டோரை ஒரே ஆம்புலன்ஸ் வாகனத்தில் அடைத்து சட்டப்பேரவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோஸ்


புதுச்சேரி