புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டு சந்திப்பு அருகிலுள்ள ராஜகோபால் தெருவிலிருந்து பிள்ளையார் கோயில் வீதி வரையிலான கலிதீர்த்தால்குப்பம் கிராமத்தில் உள்ள ஆர். சி. 21 எல்லைப்புற சாலையின் இருபுறமும் சிமெண்ட் கான்கிரீட் கொண்டு சமப்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. ரூபாய் 35 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்ற பணிகளை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை கோட்டம் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஜெயராஜ், இளநிலை பொறியாளர் வெங்கடேஸ்வரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.