திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் மணவெளி தெருவை சேர்ந்தவர் அரிராம் (வயது 45). அவரது மனைவி அருண் மொழி (41). அ
இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அரிராம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அருண்மொழி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வீட் டில் யாரும் இல்லாத நேரத்தில் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை, வெள்ளி கொலுசுகள், ரூ. 5 ஆயிரத்தை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடியது கடலூர் மாவட்டம் பண்ருட்டி சோலை கவுண்டர்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரவேலு (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து மதகடிப்பட்டு தனியார் மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 பவுன் நகை, வெள்ளி கொலுசுகள், ரூ. 5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.