அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக மாநிலக் கழகப் பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தனது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகிறார். அந்த வகையில் வீராம்பட்டினம் பகுதியில் மீனவ வியாபார மகளிர்களுக்கு அன்னக்கூடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பெருளாளர் ரவி பாண்டுரங்கன் கலந்துகொண்டு மீனவ வியாபார மகளிர்கள் 350-க்கும் மேற்பட்டோருக்கு மீன் விற்பதற்கான அன்னகூடையை வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை தொகுதி கழக செயலாளர் ராஜா செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மாநில மீனவர் அணி இணை செயலாளர் ராஜவேலு மற்றும் தொகுதி அவைத்தலைவர் ராஜேந்திரன், வார்டு கழக செயலாளர் பன்னீர்செல்வம், அம்மா பேரவை துணை செயலாளர் ஜீவா, வார்டு கழக நிர்வாகிகள், அவை தலைவர் நாகப்பன், துணை செயலாளர் மணி, மஞ்சினி, தொகுதி துணை செயலாளர் சிவகுமார், வார்டு செயலாளர் பாலு, ரங்கநாதன், பழனி, இளைஞர்கள் பரத், சிம்பு மற்றும் நிர்வாகிகள், மீனவ பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.