அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பாக உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச பல் பரிசோதனை முகாம் மற்றும் வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம் கரிக்கலாம்பாக்கம் சமுதாயம் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன், விரிவாக்க அதிகாரி சவரிராஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை தேசிய வாய் சுகாதார திட்ட மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி கவிப்பிரியா கருத்துரை வழங்கி முகமினை நடத்தினார். நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹெலன் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்து விளக்கவுரை ஆற்றினார். மேலும் சர்ஜன் மொபைல் டென்டல் யூனிட். பல் அறுவை சிகிச்சை நிபுணர் சுகந்தி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டார். செவிலியர்கள் மணிமொழி, வனிதா, அமுதா ஆகியோர்கள் இணைந்து பல் பரிசோதனை முகாமினை ஒருங்கிணைத்து நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சார்ந்த அலுவலக பணியாளர்கள் மற்றும் திட்ட பணியாளர்கள், மகளிர் கூட்டமைப்பினை சேர்ந்த 80 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். தொடர்ந்து முகாமில் வாய் சுகாதாரம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.