குடிபோதையில் நண்பரை பீர்பாட்டிலால் குத்தியவர் கைது

55பார்த்தது
புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொம்பாக்கம் டான்போஸ்கோ நகரில் கடந்த 12ம் தேதி ரத்த வெள்ளத்தில் ஒதியம்பட்டை சேர்ந்த முரளி (எ) முரளிதரனை அவரது சகோதரர் பாரதிபிரியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு, போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது 12ம் தேதி மாலை முதல் முரளி, பாரதி, சம்சுதீன் ஆகியோர் ஒன்றாக குடித்துக்கொண்டிருந்தனர். பின்னர் சம்சுதீன் மட்டும் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு முரளி மற்றும் பாரதி ஆகிய இருவரும் இந்திராகாந்தி சிலை அருகில் உள்ள பாரில் மீண்டும் பீர் வாங்கிக்கொண்டு வந்து குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மேற்படி முரளியை பாரதி பீர் பாட்டிலால் குத்திவிட்டு, சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் புதிய பைபாஸ் ரோட்டில் ஏரிக்கரை வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பாரதியை எஸ்ஐ அலாவுதீன் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி