புதுச்சேரி - Puducherry

புதுவையில் 110 பேர் 1188 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை

பாரம்பரிய கலையான கரலாக்கட்டையை குறித்து அடுத்து வரும் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 12-ம் தேதி உலக கரலாக்கட்டை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு புதுச்சேரி பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் ஷத்ரிய குருகுலம் சார்பில் உலக கரலாக்கட்டை தினத்தை முன்னிட்டு 13-வது ஆண்டாக அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்டு நிகழ்ச்சி நடைபெற்றது.  புதுச்சேரி பேரடைஸ் கடற்கரையில் ஜோதி சிலம்பம் ஷத்ரிய குருகுல நிறுவனர் கலைமாமணி ஜோதி செந்தில் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியை சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார், பாஜக மாநில செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார், அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்பின் செயற் மேலாளர் தமிழ்வாணன், தேசிய ஒருங்கிணைப்பாளர் அருண் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 110 பேர் கலந்து கொண்டனர்.  இடைவிடாமல் 21 நிமிடம் நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில் பித்தம், வாதம், கபம், என்ற அடிப்படையில் மெய்ப்பாடம் 1188 முறை சுற்றி உலக சாதனை படைத்தார்கள். சாதனை படைத்தவர்களுக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


புதுச்சேரி